கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழா
ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் அனைத்து கல்லூரிகள் சார்பாக சுதந்திர தின விழா நடைபெற்றது. பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். அவர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விருது பெற்ற பேராசிரியர் ரத்தினகுமாருக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினார். ரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கும், நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, கலாசார போட்டிகள் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும் நடராஜன் பரிசு, சான்றிதழ் வழங்கினார். பாவை கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் மணி சேகரன் செயலாளர் டி.ஆர். பழனிவேல், இணைச் செயலாளர் என்.பழனிவேல், இயக்குனர் செந்தில், அனைத்து கல்லூரி முதல்வர்கள், முதன்மையர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பாவை வித்யாஸ்ரம் பள்ளிகள்
ராசிபுரம் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் சுதந்திர தின விழா பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாணவன் புண்யா அருண்குமார் வரவேற்றார். மாணவ, மாணவிகள் பாடல்களை பாடினர். நடன நிகழ்ச்சிகள் நடந்தன. விடுதலைக்கு போராடிய தியாகிகளை நினைவூட்டும் வகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் மாணவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. விழாவில் பள்ளிகளின் இயக்குனர் சதீஷ், முதல்வர் ரோகித், பள்ளியின் தலைமை ஆசிரியை நிரஞ்சனி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவன் சனத் பெருமாள் நன்றி கூறினார்.
முத்தாயம்மாள் நினைவு அறிவியல் கல்லூரி
ராசிபுரம் அருகே காக்காவேரியில் உள்ள முத்தாயம்மாள் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் தாளாளர் பிரேம்குமார் ராமசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார். கல்லூரியின் முதல்வர் மணிகண்டன் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அனைவரும் சுதந்திர தின உறுதி மொழியை ஏற்றனர். விழாவில் துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
வநேத்ரா முத்தாயம்மாள்
ராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் ஓர் அங்கமான முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன் முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரிகளில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனங்களின் செயலாளர் முத்துவேல் ராமசாமி தலைமை தாங்கினார். முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன் முதல்வர் மணி உறுதிமொழி வாசித்தார். வநேத்ரா முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷன் இயக்குனர் (கல்வி) செல்வகுமரன் சுதந்திர போராட்டத் தியாகிகளை பற்றியும், சுதந்திரத்தை பேணி காக்க வேண்டும் என்றும் கூறினார். விழாவில் விஜயகுமார், மருதை, ஸ்டெல்லா பேபி, எம்.என்.பெரியசாமி, துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பாபு செய்திருந்தார்.
எக்ஸல் கல்வி நிறுவனங்கள்
குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் நடேசன் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். எக்ஸல் பப்ளிக் ஸ்கூல் இயக்குனர் கவியரசி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முதல்வர்கள் அன்புகருப்புசாமி, விமல் நிஷாந்த், சைமன் அருண்பரத்குமார், கோர்ஸிகநான்சி, ஐயப்பன், நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை எக்ஸல் கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி துறை இயக்குனர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். முடிவில் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
செங்குந்தர் பொறியியல் கல்லூரி
திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் பொருளாளர் தனசேகரன் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றினார். கல்லூரியின் நிர்வாகி மதன் மற்றும் வேலைவாய்ப்பு துறை இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் சதீஷ்குமார், செங்குந்தர் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் சுரேந்திரகுமார், செவிலியர் கல்லூரியின் முதல்வர் லீலாவதி ஆகியோர் உடன் இருந்தனர். 3-ம் ஆண்டு தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவி தி.ஹிந்துஜா வரவேற்றார். விழாவில் மாணவர் படையினரின் அணிவகுப்பு மாியாதை நடைபெற்றது. தேசிய மாணவர் படை, விமான படை பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகள் சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வாயு சைனிக் 2023 போட்டியில் பங்கு பெற்று துப்பாக்கி சுடுதல் பிரிவில் 2 தங்கம் வென்ற து.வினோத்கண்ணா, என்.பாலாஜி, கூடாரம் அமைத்தலில் தி.ஹிந்துஜா வெள்ளி மற்றும் ஆரோக்கியம், சுகாதாரம் பாடத்தில் வெள்ளி வென்ற வி.ஜனனி, குழு அணிவகுப்பில் 3-ம் இடம் வென்ற ஆர்.வல்லரசு, எம்.மகிஷ்ஸ்ரீமன் ஆகிய மாணவ, மாணவிகளை பாராட்டினர்.
விவேகானந்தா மகளிர் கல்லூரி
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி, இணை நிர்வாக இயக்குனர் அர்த்தநாரீஸ்வரன், இணை செயலாளர் ஸ்ரீராகநிதி, துணைத்தலைவர் கிருபாநிதி, இயக்குனர் நிவேதனா, முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், நிர்வாக இயக்குனர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தாளாளர் மு.கருணாநிதி தேசியக்கொடியை ஏற்றி மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சமாதானத்தின் சின்னமான வெள்ளை புறாவை பறக்கவிட்டனர். இதில் விவேகானந்தா மகளிர் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் அனைத்து கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்கள்
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் சேர்மன் சீனிவாசன் தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி தியாகராஜா, இயக்குனர் மோகன், கல்லூரி முதல்வர்கள் குழந்தைவேல், மகுடீஸ்வரன், கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், வெங்கடேசன், கார்த்திகேயன், செந்தில்குமார், நிர்வாக அலுவலர் வெங்கடாஜலம் உள்ளிட்ட கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.