திண்டுக்கல்லில், பழங்கள் விலை உயர்வு

திண்டுக்கல்லில் கோடைகாலத்தையொட்டி பழங்கள் விலை உயர்ந்துள்ளது.

Update: 2023-04-11 19:00 GMT

கோடைக்காலம் வந்தாலே, குளிர்ச்சி தரும் பழங்களை மக்கள் நாடி செல்வது வழக்கம். அந்தவகையில் திண்டுக்கல்லில் தர்ப்பூசணி, மாதுளை, திராட்சை, எலுமிச்சை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் மற்றும் நுங்கு விற்பனை தற்போது களை கட்டியுள்ளது. இதையொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.5-க்கு விற்ற ஒரு எலுமிச்சை (பெரிய பழம்) விலை உயர்ந்து ரூ.10-க்கும், சிறிய பழம் ரூ.6-க்கும் நேற்று விற்பனை ஆனது.

இதேபோல் ரூ.20-க்கு விற்பனை ஆன ஒரு கிலோ திராட்சை விலை ரூ.40-க்கு விற்பனை ஆகிறது. மேலும் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையில் விற்பனை ஆன தர்பூசணி விலை அதிகரித்து ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மற்ற பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பழ வியாபாரி ஒருவர் கூறும்போது, கோடைக்காலத்தில் பழங்களின் வரத்து குறையும். ஆனால் அதன் தேவை அதிகரிக்கும். இதையொட்டி பழங்களின் விலை தற்போது உயர்ந்துள்ளது. இனி வரும் 2 மாதத்துக்கு பழங்களின் விலை இதே நிலவரத்தில் இருக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்