வெவ்வேறு சம்பவங்களில்பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-02-17 18:45 GMT

ஆண்டிப்பட்டி நகரில் உள்ள சக்கம்பட்டி சீதாராம்தாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயராணி. இவரது மகள் அக்்ஷய தர்ஷிணி (வயது 17). இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர், 10-ம் வகுப்பு வரை மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். அதன்பின்னர் குடும்ப வறுமையின் காரணமாக அரசு பள்ளியில் படித்தார். இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அக்்ஷய தர்ஷிணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.ராஜகோபாலன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (35). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவருக்கு குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள பூஜை அறையில் வினோத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். இந்த 2 சம்பவங்கள் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்