தேவதானப்பட்டியில்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தேவதானப்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2023-06-27 18:45 GMT

தேவதானப்பட்டியில் மெயின்ரோட்டில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அட்டணம்பட்டியில் இருந்து தேவதானப்பட்டி வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தொடங்கியது. இதையடுத்து பெரியகுளம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரின் சுல்தான் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இதையொட்டி பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்