கடலூரில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு

கடலூரில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.

Update: 2022-10-19 18:45 GMT

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் கடலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் மாநகராட்சி ஆண்டுகள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மாணவர்களிடம் வினியோகம் செய்யப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தீ தடுப்பு குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்