கடலூரில்நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரி ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கடலூரில் நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரியால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-02-23 18:45 GMT

கடலூர் முதுநகர் பகுதியில் இருந்து நேற்று காலை எம்சாண்ட் ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி ஒன்று கடலூர் இம்பிரீயல் சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. உழவர் சந்தை சிக்னல் அருகில் காலை 8.30 மணியளவில் வந்ததும் திடீரென டிப்பர் லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதனால் இம்பிரீயல் சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் திண்டாடினர். இதற்கிடையே மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுதாகி நின்ற லாரியில் பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து பழுது பார்க்கப்பட்ட பிறகு காலை 9 மணியளவில் லாரி அங்கிருந்து புறப்பட்டு ஜவான் பவன் சாலை வழியாக சென்றது. பழுதாகி நடுரோட்டில் நின்ற லாரியால் இம்பிரீயல் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்