மாநகராட்சி பள்ளிக்கூடத்தில்மழலையர் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகம்

மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் மழலையர் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகம்

Update: 2023-08-29 20:47 GMT

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிக்கூடங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதனால் 3 வயது, 4 வயது நிரம்பிய குழந்தைகளும் அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் படித்து வருகிறார்கள். தனியார் பள்ளிக்கூடங்களுக்கு பணம் செலுத்தி குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்க முடியாத ஏழை பெற்றோருக்கு இது வரப்பிரசாதமாக உள்ளது.

ஆனால், மழலையர் வகுப்புகளுக்கு முறையான பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு இலவச புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் படிக்கும் மழலையர் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு நன்கொடையாளர்கள் மூலம் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கிய நிகழ்ச்சி நேற்று நடந்தது. நன்கொடை வழங்கிய ஈரோடு தி டென்னிஸ் கிளப் அமைப்பின் செயலாளர் ஆர்.வேலுச்சாமி தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் மாணவரும், தி.மு.க. வார்டு செயலாளருமான திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். ஈரோடு வட்டார கல்வி அதிகாரி மணிவண்ணன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடப்புத்தகங்கள் வழங்கி பேசினார். அமைப்பு நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் கே.சுமதி வரவேற்றார். மழலையர் வகுப்பு ஆசிரியைகள் சந்திரா, லோகாம்பாள் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்