குன்னூரில் புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா-18-ந் தேதி நடக்கிறது
குன்னூரில் புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா-18-ந் தேதி நடக்கிறது
குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பழமைவாய்ந்த அந்தோணியார் தேவாலயம் உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 137-வது ஆண்டு திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வாக இத்தாலி நாட்டில் உள்ள பதுவா நகரிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித அந்தோணியாரின் உடலின் ஒரு சிறு பகுதி திருசொரூபமாக குன்னூர் அந்தோணியார் ஆலயத்தில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ், சொரூபத்தை அர்ச்சித்து சிறப்பு திருப்பலியை நிைறவேற்றினார். விழாவில், 35 சிறுவர் சிறுமியர் புது நன்மை, உறுதி பூசுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வருகிற 18-ந்தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. புனித அந்தோணியார் திருத்தல பங்கு தந்தை ஜெயக்குமார், உதவி பங்கு தந்தை ஆன்டோ மெல்டாஸ் ராக் மற்றும் பங்குமக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.