சென்னிமலையில் முறிந்து விழும் நிலையில் உள்ள மரத்தை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
பொதுமக்கள் கோரிக்கை
சென்னிமலையில் அதிக போக்குவரத்து உள்ள முக்கிய ரோடு ஈங்கூர் ரோடு ஆகும். இந்த ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெரிய வாதானி மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதியில் மிகப் பெரிய அளவில் சந்து ஏற்பட்டதால் மரம் வலுவிழந்து ஏற்கனவே ஒரு கிளை ஒடிந்து ரோட்டில் விழுந்தது.
தற்போது அந்த மரத்தின் மற்றொரு கிளையும் எந்த நேரமும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளதால் உடனடியாக அந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது குறித்து சென்னிமலை பேரூராட்சியின் 2-வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி கண்ணன் கூறும்போது, 'சென்னிமலையில் அதிக போக்குவரத்து உள்ள ரோடு ஈங்கூர் ரோடு ஆகும். தினமும் இந்த வழியாக நூற்றுக்கணக்கான பள்ளிக்கூட, கல்லூரி மற்றும் அரசு, தனியார் பஸ்கள் சென்று வருகிறது. பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வருபவர்கள் இங்கு நிற்பதும் உண்டு. இந்த பகுதியில் கடைகள் மற்றும் அலுவலகங்களும் உள்ளது. அதனால் இந்த மரம் திடீரென ஒடிந்து விழுந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் வருவாய்த்துறையினரின் அனுமதி பெற்று மரத்தை அகற்றுவதாக தெரிவித்தனர். அதன் பிறகு 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை மரத்தை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக அந்த மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்