சென்னிமலையில்பணியாளர்களின்றி வெறிச்சோடிய அரசு அலுவலகம்
சென்னிமலையில் பணியாளர்களின்றி வெறிச்சோடிய அரசு அலுவலகம் வெறிச்சோடியது.
சென்னிமலை
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் ஈரோடு மாவட்ட அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அனைத்து பணியாளர்களும் ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்று விட்டதால் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது.