சென்னிமலை வனப்யிபகுதில்தற்கொலை செய்து கொண்டவர் மருத்துவ கல்லூரி மாணவர்
மருத்துவ கல்லூரி மாணவர்
சென்னிமலை வனப்பகுதியில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
ஈரோடு மாவட்டம் சென்னிமலை வனப்பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்த வாலிபர் யார்? எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வந்தனர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் செல்போனை கைப்பற்றி விசாரித்தனர்.
மருத்துவ கல்லூரி மாணவர்
விசாரணையில் அந்த வாலிபர், கடலூர் மாவட்டம் பெரிய கள்ளிப்பட்டு காந்தாரகோட்டையை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் ஜெயக்குமார் (வயது 19) என்பது தெரியவந்தது.
மேலும் நடத்திய விசாரணையில் ஜெயக்குமார் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி. அனஸ்டாசியா முதலாம் ஆண்டு படித்து வந்ததும், இந்த நிலையில் சென்னிமலை வந்த அவர் வனப்பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.