சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு..!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து உள்ளது.

Update: 2023-05-20 04:29 GMT

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று ரூ.440 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.5,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.   

Tags:    

மேலும் செய்திகள்