பவானி பூக்கடை பிரிவில் நேற்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்தவரை நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் தாறுமாறாக ஓட்டி தப்பி செல்ல முயன்றார். உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.
அதில் அவர் ஈரோடு லக்காபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கருவாமணி என்கிற மணிகண்டன் (வயது 24) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டுபோன மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோட்டார்சைக்கிள் திருடிய கருவாமணியை கைது செய்தார்கள்.