பவானிசாகர் அணைப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

பவானிசாகர் அணைப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமாக செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Update: 2022-09-25 21:11 GMT

பவானிசாகர்

பவானிசாகர் அணைப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமாக செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

காட்டு யானைகள் கூட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது.

இந்த காட்டு யானைகள் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் வந்து தண்ணீர் குடித்துவிட்டு குளித்து கும்மாளமிடுவது வழக்கம்.

மழை காரணமாக பவானிசாகர் அணையின் ஏரி பகுதியில் உள்ள புற்கள் துளிர்த்து பசுமையாக காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைகள் பவானிசாகர் அணையின் ஏரி பகுதியிலேயே புற்களை சாப்பிட்டு விட்டு அங்கேயே முகாமிட்டு உள்ளது‌.

பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை

எனவே அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிக்க ஏரி வழியாக செல்லும் மீனவர்கள் கவனமாக செல்லுமாறு பவானிசாகர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே பவானிசாகர் அணையின் ஏரி பகுதியில் முற்றுகையிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்