பர்கூரில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவி- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழங்கினார்

பர்கூரில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழங்கினார்.

Update: 2023-09-10 21:30 GMT

அந்தியூர்

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கொங்காடை, அக்கினி பாவி ஆகிய பகுதிகளில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கலந்து கொண்டு 50 குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகை சாமான்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வழங்கினார்.

இதில் ஈரோடு நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பர்கூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்