பாலமேட்டில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்

பாலமேட்டில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.

Update: 2023-04-09 19:57 GMT

அலங்காநல்லூர்

பாலமேடு பேரூர் கழகத்தின் சார்பாக தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தொகுதி மேற்பார்வையாளர் சம்பத், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி தலைவர் சுமதிபாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன் வரவேற்றார்.

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, செல்வம், ராமராஜ், லெட்சுமணன், ஜெயமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவைத் தலைவர் தங்கம் குரு நன்றி கூறினார். முன்னதாக புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, அரசின் செயல் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்