அந்தியூரில் குடிபோதையில் சாக்கடையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
தொழிலாளி சாவு
அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூரை சேர்ந்தவர் பொம்முசாமி. கூலித்தொழிலாளி (வயது 53). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்தியூர் தவுட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தார். பின்னர் அவர் மது அருந்திவிட்டு சாக்கடை அருகே இருந்த தடுப்புச்சுவரில் உட்கார்ந்து உள்ளார். இதில் குடிபோதையில் அவர் தவறி சாக்கடையில் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் இறந்துவிட்டார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொம்முசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.