அந்தியூரில்குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்
அந்தியூரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
அந்தியூா்
அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்திகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர் கரடியானூர் கிராமத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் நடத்தினார்கள். முகாமில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கிராம செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டார்கள்.