அந்தியூரில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அந்தியூரில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

Update: 2023-09-05 21:51 GMT

அந்தியூர்

அந்தியூரில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள், 'சனாதன கொள்கை குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என அறிவித்த உத்தரபிரதேச சாமியாரான பிரம்ஹன்ஸ் ஆச்சாரியாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். மேலும் அவர்கள் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியாரின் உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்தியூர் போலீசார் விரைந்து சென்று உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்