அந்தியூரில்ரூ.2¼ லட்சத்துக்கு எள் விற்பனை

அந்தியூரில் ரூ.2¼ லட்சத்துக்கு எள் விற்பனையானது.

Update: 2023-04-14 22:23 GMT

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. எள் 24 மூட்டை கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக 13 ஆயிரத்து 429 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 15 ஆயிரத்து 669-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 241 ரூபாய்க்கு விற்பனையானது.

3 ஆயிரத்து 433 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இது ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 20 ரூபாய் 50 காசுக்கும், அதிகபட்ச விலையாக 25 ரூபாய் 10 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 45 ஆயிரத்துக்கு விற்பனையானது.

கொப்பரை தேங்காய் 33 மூட்டை கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக 6 ஆயிரத்து 779 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 8 ஆயிரத்து 179 ரூபாய்க்கும் ஏலம் போனது.

ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், கோவை, தர்மபுரி பகுதி வியாபாரிகள் விளைபொருட்களை வாங்கிச்சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்