அந்தியூரில் 10 நாட்களாக கேட்பாரற்று நிற்கும் மர்ம கார்

அந்தியூரில் 10 நாட்களாக காா் ஒன்று கேட்பாரற்று நிற்கிறது.

Update: 2023-01-06 21:17 GMT

அந்தியூர்

அந்தியூரில் இருந்து பவானி செல்லும் ரோட்டு ஓரம், ஒரு தனியார் பெட்ரோல் பங்க் எதிரே கடந்த 10 நாட்களாக கேட்பாரற்று கார் ஒன்று நிற்கிறது. அந்த கார் யாருடையது என்று தெரியவில்லை. எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும் அந்த ரோட்டில் கார் நிற்பது போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. மேலும் கேட்பாரின்றி கார் நிற்பதால் அச்சப்படும் வகையில் காருக்குள் ஏதாவது உள்ளதா? என்றும் தெரியவில்லை. எனவே போலீசார் பாதுகாப்புடன் காரை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது காரின் உரிமையாளரை கண்டுபிடித்து வரவழைத்து காரை எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்