பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையில் கள்ளச்சாவி மூலம் கதவை திறந்து திருடியவர் கைது
பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையில் கள்ளச்சாவி மூலம் கதவை திறந்து திருடியவர் கைது செய்யப்பட்டார்
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 64), கே.புதூர் தொழிற்பேட்டையில் பொம்மை தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு பொம்மைக்கு தேவையான மூலப்பொருட்களை மூடைகளில் வாங்கி அடுக்கி வைத்துள்ளார். அவற்றில் 4 மூடைகள் திருடு போனது. இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் செல்லூர் பாக்கியநாதபுரம் பகுதியைசேர்ந்த கருப்புசாமி (23) என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர் தொழிற்சாலை கதவின் பூட்டுக்கு கள்ளச்சாவியை தயாரித்து அதன் மூலம் கதவை திறந்து உள்ளே சென்று திருடியது தெரியவந்தது.