புன்னக்காயலில் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை

புன்னக்காயல் பகுதியில் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாலுமிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2022-06-20 14:24 GMT

புன்னக்காயல் பகுதியில் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாலுமிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் நலச்சங்க நெல்லை மாவட்ட பொதுச் செயலாளர் சுடலைமுத்து தலைமையில் ஓய்வூதியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், 79 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.

குடிநீர் திட்டம்

புன்னக்காயல் கப்பல் மாலுமிகள் நலச்சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிரவாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், கடந்த 2018-19-ம் ஆண்டு தேசிய கப்பல் மாலுமிகள் சம்மேளனம் மற்றும் அரசு இணைந்து புன்னக்காயலில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நமக்கு நாமே திட்டம் என்ற அடிப்படையில் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இதுவரை முடிவடையவில்லை. இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டம் நிறைவேற தடையாக இருக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து, குடிநீர் வாரிய அதிகாரிகளை எங்கள் ஊர் கமிட்டி மற்றும் மாலுமிகள் சங்கத்தோடு இணைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மனிதநயே மக்கள் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், குளத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியைகள் சாதி ரீதியாக பேசிய சம்பவம் பரபரப்பை உருவாக்கி உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சாதி, மத மோதல்களை தடுத்து, சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் பள்ளிக்கூடங்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்