மோட்டார் சைக்கிள் விபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி சாவு

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2022-12-08 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் பெருமாள் சாமி (வயது 45). அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர். மேலும் பழைய சாக்கு கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று மாலையில் வீட்டிலிருந்து கடைக்கு மோட்டார் சைக்கிளில் ெசன்று கொண்டிருந்தார். மந்திதோப்பு சாலையில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பெருமாள் சாமியின் மோட்டார் சைக்கிளுடன் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவருக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு பைக்கில் வந்த கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சதுரகிரி ( 52) என்பவரும் படுகாயத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்