மேச்சேரி
தொல்லியல் பொருட்கள் கண்காட்சி, தொன்மையை பாதுகாப்போம் மன்றம் தொடக்க விழா, தமிழ் கல்வெட்டு எழுத்துகள் பயிற்சி ஆகிய முப்பெரும் விழா மேச்சேரி அருகே அமரத்தானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் நடந்தது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேஷ் கண்ணா, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொல்லியல் கண்காட்சி மற்றும் தமிழ் கல்வெட்டு எழுத்துக்கள் பயிற்சியை மாதநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் விஜயகுமார், அன்பரசி ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஆசிரியை லட்சுமி நன்றி கூறினார்.