ஜனநாயக அமைப்பில் ஒரே கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அனைவரையும் வற்புறுத்த இயலாது - சென்னை ஐகோர்ட்டு

ஜனநாயக அமைப்பில் ஒரே கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அனைவரையும் வற்புறுத்த இயலாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2023-09-08 10:42 GMT

சென்னை,

செந்தில் மல்லர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஆகஸ்ட் 27-ம் தேதி பூந்தமல்லியில் திராவிட கருத்தியலுக்கு எதிராக திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த இருந்ததாகவும் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அனுமதி மறுத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திராவிட கொள்கை குறித்த பெரும்பான்மை கருத்துக்கு விரோதமாக கருத்துக்கள் பரிமாறப்படலாம் என்பதற்காக அவர்கள் கருத்துக்கள் தெரிவிப்பதை தடை செய்யக்கூடாது என்று நீதிபதி கூறினார். ஜனநாயக அமைப்பில் ஒரு நம்பிக்கை அல்லது ஒரு கொள்கை குறித்து இரு வேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்புள்ளது என்றும் ஒரே கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அனைவரையும் வற்புறுத்த இயலாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

ஒரு கொள்கை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை கொண்டிருக்க உரிமை உள்ளதால் மாநாட்டிற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.Full View

Tags:    

மேலும் செய்திகள்