தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட 4 இடங்களிலுள்ளஅரசு ஐ.டி.ஐ.க்களில் நேரடி மாணவர் சேர்க்கை

தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட 4 இடங்களிலுள்ள அரசு ஐ.டி.ஐ.க்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-28 18:45 GMT

தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை, நாகலாபுரம் ஆகிய 4 அரசு ஐ.டி.ஐ.க்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நேரடி சேர்க்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்களிடம் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஐ.டி.ஐ சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை ஐ.டி.ஐ சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம்.

நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ள விரும்புவோர் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் இரு நகல்களுடன் சேர விரும்பும் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம்.

உதவித் தொகை

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் வருகைக்கு ஏற்ப உதவித்தொகை ரூ.750, கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், பாடப் புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. எனவே இதுவரை ஐ.டி.ஐ-யில் விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நேரடியாக தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்