தூத்துக்குடி தருவைகுளம் உள்ளிட்ட 3இடங்களில்சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி

தூத்துக்குடி தருவைகுளம் உள்ளிட்ட 3இடங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது.

Update: 2023-09-29 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி வருகிற 4-ந் தேதி நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சுனாமி ஒத்திகை

தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களின் சுனாமி முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து ஐதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு தகவல்களை தெரிவித்து வருகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து கடலோர மாவட்டங்களில் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொண்ட ஒத்திகை மற்றும் பயிற்சி வருகிற 4-ந் தேதி நடக்கிறது.

3 இடங்களில்..

இந்த ஒத்திகை நிகழ்ச்சி தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டி, காயல்பட்டினம் கொம்புத்துறை, தருவைக்குளம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. ஒத்திகையில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்புகள் பெறப்படும் போது, அந்த தகவல் பரிமாற்றம் அரசுத்துறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பது ஒத்திகையின் மூல் பரிசோதிக்கப்படுகிறது.

ஆகையால் வருகிற 4-ந் தேதி சுனாமி எச்சரிக்கை நடவடிக்கைகள் ஒத்திகை மட்டுமே ஆகும். இது தொடர்பாக பொதுமக்கள் எந்தவித அச்சம் பீதியடைய தேவை இல்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்