தேனி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 7 இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

தேனி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 7 இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

Update: 2022-06-10 14:00 GMT

18 வயது பூர்த்தி அடையாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் ஆகும். ஆனாலும், தேனி மாவட்டத்தில் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று போடி, பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் திருமண வயதை எட்டாத இளம்வயது பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடப்பதாக 1098 என்ற சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்ணுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலக ஊழியர்கள், சைல்டு லைன் அலுவலர்கள், சமூக நலத்துறை ஊழியர்கள், போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று பகலில் இருந்து குழந்தை திருமணம் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டினர். நள்ளிரவுக்குள் 5 இடங்களில் நடக்க இருந்த இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

நேற்று காலையில் மேலும் 2 இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அந்த இரு திருமணங்களும் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால், திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்