சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனைகிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

Update: 2023-08-11 19:45 GMT

கிருஷ்ணகிரி

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டது.

பாலியல் பலாத்காரம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர், ராஜாஜி நகரில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்ய வற்புறுத்தினார். அதற்கு சிறுமி மறுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த, 28.8.2020 முதல் சிறுமியை காணவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் சிறுமியை, வினோத்குமார் கடத்தி சென்று திருமணம் செய்ததும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து வினோத்குமாரை கைது செய்தனர்.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வினோத்குமாருக்கு 20 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

மேலும் இந்த தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகினார்.

Tags:    

மேலும் செய்திகள்