சக்தி அம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு

கடையம் அருகே சக்தி அம்மன் கோவிலில் ஐம்பொன் சிலையை மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர்.

Update: 2022-06-02 16:25 GMT

கடையம்:

கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட லெட்சுமியூரில் சக்தி அம்மன் கோவில் உள்ளது. இங்கு சுமார் 35 குடும்பத்தினர் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் கணபதி மகன் முருகன் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை கோவில் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. கோவிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன சுமார் 2 அடி உயர சக்தி அம்மன் சிலை திருட்டு போய் இருந்தது. இதை பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு மற்றும் கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி ரவிசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐம்பொன் சிலையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி ேதடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்