பிளம்ஸ் பழ விளைச்சல் பாதிப்பு

கொடைக்கானலில் பிளம்ஸ் பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-09 19:30 GMT

கொடைக்கானல் தாலுகாவை சேர்ந்த வில்பட்டி, பள்ளங்கி, கோம்பை, அட்டுவம்பட்டி, செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமப்பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பிளம்ஸ் பழங்கள் விளைவிக்கப்படுகின்றது. இவை ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் விளைச்சல் அடைகிறது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் பிளம்ஸ் பழங்கள் அதிக சுவை கொண்டதாகும். இவை சென்னை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பனி தாக்கம், அதிகப்படியான மழை பொழிவு உள்ளிட்ட பருவநிலை மாற்றத்தினால் பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் கடந்த மாதம் தொடங்காமல் இந்த மாத மத்தியில் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டுகளில் ஒரு மரத்தில் 100 கிலோ பிளம்ஸ் அறுவடை செய்த நிலையில் தற்போது 10 கிலோ பழங்கள் மட்டுமே கிடைக்கின்றது. இதனால் இந்த ஆண்டு பிளம்ஸ் பழ விளைச்சல் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, தற்போது ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையானாலும், தொழிலாளர்கள் கூலி செலவுக்கு கூட பற்றாக்குறையாக உள்ளது. எனவே தோட்டக்கலை துறையினர் கவனம் செலுத்தி உரிய இழப்பீடு தொகை வழங்க முன் வர வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்