2 சிவாலயங்களில் குடமுழுக்கு

மயிலாடுதுறை அருகே 2 சிவாலயங்களில் குடமுழுக்கு நடந்தது

Update: 2022-09-08 17:52 GMT

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் தருமபுரம்ஆதீனத்துக்கு சொந்தமான மணக்குடி சவுந்தரநாயகி சுந்தரேஸ்வரர் கோவில், கருங்குயில்நாதன்பேட்டை கிராமத்தில் ஆனந்தவல்லி சக்திபுரீஸ்வரர் ஆகிய 2 கோவில்களில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக இந்த கோவிலிக்ளில் பூர்வாங்க பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மணக்குடி சுந்தரேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை 4-ம்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் முன்னிலையில் காலை 6 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம்வந்து 6.30 மணியளவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான அபிஷேகம் நடந்தது. இதைப்போல கருங்குயில்நாதன்பேட்டை சக்திபுரீஸ்வரர் கோவிலில் காலை 6 மணிக்கு 4-ம்காலயாகசாலை பூஜைகள் தொடங்கியது. 8 மணிக்கு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து காலை 9.30 மணியளவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் சூரியனார்கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சாமிகள், காசிமடத்து இளவரசு ஸ்ரீமத்சபாபதி தம்பிரான் சாமிகள், தருமை ஆதீனம் திருஞானசம்பந்த தம்பிரான் சாமிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்