இலுப்பையூரணி பள்ளியில்கராத்தே பட்டய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

இலுப்பையூரணி பள்ளியில் கராத்தே பட்டய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-03-31 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி இலுப்பையூரணி ஏஞ்சல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி தலைமை தாங்கினார்.

கராத்தே பயிற்சி முடித்த கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி, தெற்கு வண்டானம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பட்டயச் சான்றிதழ்களை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரராகவன் வழங்கினார். நிகழ்ச்சியில் கராத்தே மாஸ்டர் காசி மாரியப்பன், உடற்கல்வி ஆசிரியர் அணுக்கரக ராமன், தெற்கு வண்டானம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சி ஆகியோர் மாணவர்களை பாராட்டி பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்