வீட்டுக்குள் சுற்றித்திரிந்த உடும்பு
வீட்டுக்குள் சுற்றித்திரிந்த உடும்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
ஆலங்காயம் கொல்லத்தெருவில் வசிப்பவர் அரவிந். இவரது வீட்டுக்குள் உடும்பு ஒன்று சுற்றித்திருந்தது. இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் ஆலங்காயம் தீயணைப்பு நிலைய அதிகாரி மேகநாதன் குழுவினருடன் விரைந்து சென்று வீட்டிற்குள் சுற்றித் திரிந்த உடும்பை உயிருடன் பிடித்து அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.