சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

பேரையூர் முஸ்லிம் ஜமாத் சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-04-12 21:31 GMT

பேரையூர்

பேரையூர் முஸ்லிம் ஜமாத் சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜம்ஜம் மஹாலில் நடந்தது. ஜமாத் தலைவர் சர்புதீன் தலைமை தாங்கினார். செயலாளர் கபீர்அகமது முன்னிலை வகித்தார். தொழிலதிபர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா, பேரூராட்சி தலைவர் கே.கே. குருசாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமசாமி, தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை செயலாளர் வருசை முகமது, எழுமலை தொழிலதிபர் சக்கரவர்த்தி, சார் பதிவாளர் காஜா மைதீன், குழந்தைகள் நல வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் நூருல் அனிஷா, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயதாரா, அரசு வக்கீல் மதன்குமார், மின்வாரிய உதவி பொறியாளர் பாரூக், மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் சமூக நல்லிணக்கத்தை போற்று வகையில் அனைவரும் நோன்பு கஞ்சி குடித்து நோன்பு திறந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்