மருந்து கடையில் சாணி பவுடர், எலி பேஸ்ட் கேட்டால் தரக்கூடாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருந்து கடையில் சாணி பவுடர், எலி பேஸ்ட் கேட்டால் தரக்கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தள்ளார்.

Update: 2022-09-01 09:17 GMT

சென்னை,

நாடு முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலைக் குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்களை, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தியாவிலேயே அதிகமாக தற்கொலைகள் நடைபெற்ற மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

முதலிடம் பிடித்திருக்கும் மராட்டிய மாநிலத்தில் 22,207 பேரும், இரண்டாவது இடமான தமிழ்நாட்டில் 18,925 பேரும், மூன்றாவது இடத்தில் உள்ள மத்திய பிரதேசத்தில் 14,965 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த அறிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் அதிகரிந்து வரும் தற்கொலை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மருந்து கடைகளில் தனி நபராக யாராவது வந்து சாணி பவுடர், எலி பேஸ்ட் கேட்டால் தரக் கூடாது. மேலும், உயிரை மாய்துக் கொள்வதற்கு ஆதாரமான பொருட்களை மருந்து கடைகளில் வெளியில் தெரியும்படி வைக்க கூடாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்