மத்திய அரசு ஒன்றிவந்தால் சாராயத்தையே ஒழித்துவிடலாம் - கவிஞர் வைரமுத்து டுவீட்!
மத்திய அரசு ஒன்றிவந்தால் சாராயத்தையே ஒழித்துவிடலாம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ள சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து பல்வேறு வழக்குகளை பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளச்சாராய விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"சாராயம் ஒரு திரவத் தீ... கல்லீரல் சுட்டுத்தின்னும் காட்டேரி. நாம் விரும்புவது கள்ளச் சாராயமற்ற தமிழ்நாட்டை அல்ல; சாராயமற்ற தமிழ்நாட்டை; மாநில அரசு கடுமை காட்டினால் கள்ளச் சாராயத்தை ஒழித்துவிடலாம். ஒன்றிய அரசு ஒன்றிவந்தால் சாராயத்தையே ஒழித்துவிடலாம்" என்று தெரிவித்துள்ளார்.