ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கடத்தினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: தென்மண்டல போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கடத்தினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2022-09-05 16:42 GMT

உத்தமபாளையத்தில் செயல்படும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு தென்மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வந்தார். பின்னர் அவர் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு ரோந்து போலீசாருக்கு இரு சக்கர ரோந்து வாகனத்தை வழங்கினார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறுகையில், தமிழக-கேரள எல்லை பகுதியில் தேனி மாவட்டம் அமைந்துள்ளதால் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த நிலையில் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்பு ரோந்து குழு அமைத்து அவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. மேலும் 7418446469 என்ற செல்போன் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடு்க்கப்படும். ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கடத்துபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றார். அப்போது மதுரை மாவட்ட உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்