குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பெருமாள் சிலை

வத்திராயிருப்பு அருகே குளத்தை தூர்வாரும் போது பெருமாள் சிலை கிைடத்தது. அதை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-09-08 19:28 GMT

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே குளத்தை தூர்வாரும் போது பெருமாள் சிலை கிைடத்தது. அதை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சிலை கிடைத்தது

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான மாவூத்தில் உதயகிரிநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி பெரிய குளம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அறநிலையத்துறை ஏற்பாட்டில் காணொலி காட்சி மூலம் குளத்தை தூர்வாரும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் குளத்தை தூர்வாரி கொண்டு இருந்தனர். அப்போது வெண்கலத்திலான பெருமாள் சாமி சிலை ஒன்று இருந்ததை கண்டெடுத்துள்ளனர்.சிலை சம்பந்தமாக உடனடியாக வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமி சிலையை பணியாளர்களிடம் பெற்றுக் கொண்டு முறையாக வத்திராயிருப்பு தாசில்தார் உமாமகேஸ்வரி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர்.

அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க முடிவு

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை குறித்து தாசில்தார் உமா மகேஸ்வரி கூறும்போது:-

முக்கால் அடி உயரமுள்ள வெண்கலத்திலான பெருமாள் சாமி சிலை மாவூத்து கோவில் அருகே உள்ள குளத்தில் தூர்வாரும் போது கண்டெடுக்கப்பட்டது. சாமி சிலை தண்ணீரில் கிடந்த காரணத்தால் அதன் மீது அடிக்கப்பட்ட பெயிண்ட் உரிய தொடங்கி உள்ளது. தற்போது சாமி சிலை எங்களது பாதுகாப்பில் உள்ளது.முறைப்படி மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விருதுநகரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்