மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

ராணிப்பேட்டையில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், கலெக்டர் வளர்மதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2023-04-18 18:36 GMT

சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கை, கால் பாதிக்கப்பட்ட 172 நபர்களுக்கும், காது கேளாதோர் 38 நபர்களுக்கும், கண் பாதிக்கபட்பட்டவர் 34 நபர்களுக்கும், மனவளர்சி குன்றியவர்கள் 35 நபர்களுக்கும் மற்றும் குழந்தை நல மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட 36 நபர்களுக்கும் தேசிய அடையாள அட்டை பெற மருத்துவ சான்றுகளை கலெக்டர் வளர்மதி தலைமையில் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 44 நபர்களுக்கும், முதல்-அமைச்சர் காப்பீ்டு திட்டத்தில் 26 நபர்களுக்கும் பதிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அறிவுசார் குறைபாடுடையவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை வேண்டி 22 நபர்களும், வங்கி கடன் வேண்டி 12 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 6 நபர்களும், சக்கர நாற்காலி வேண்டி 7 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

நலத்திட்ட உதவி

மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 நபர்களுக்கு ரூ.10,500 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், 2 பேருக்கு தலா ரூ.8,500 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார்.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்