மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் முதல், 3-வது செவ்வாய்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் இனிவரும் காலங்களில் முதல் மற்றும் 3-வது செவ்வாய்கிழமை நடைபெறும். அரக்கோணம், நெமிலி, சோளிங்கர் மற்றும் காவேரிப்பாக்கம் ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் எளிதில் வருவதற்கு ஏதுவாக மின்னல் ஊராட்சியியை சேர்ந்த சாலை கைலாசபுரம் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள என்.எல்.பி. திருமண மண்டபத்திலும், 3-வது செவ்வாய்க்கிழமை தோறும் கலவை, திமிரி, ஆற்காடு, வாலாஜா மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.