ஐஸ் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாதுமுன்சிறை ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

ஐஸ் தொழிற்சாலைக்குஅனுமதி வழங்கக்கூடாது என்று முன்சிறை ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2022-12-07 20:07 GMT

புதுக்கடை:

முன்சிறை ஊராட்சிக்கு உட்பட்ட கொன்றரை பகுதியில் ஐஸ் தொழிற்சாைல தொடங்குவதற்கு தனியார் நிறுவனம் ஒன்று ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் மனு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கிராமத்தைச் சுற்றி மக்கள் நெருக்கமாக வசித்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் ஐஸ் தொழிற்சாலை தொடங்கினால் சுகாதாரக் சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் புகார் கொடுக்கப்பட்டு ஐஸ் தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிகிறது.

ஆனால் அந்த நிறுவனம் திட்டமிட்டபடி ஐஸ் தொழிற்சாலையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டு ஐஸ் தொழிற்சாலைைய தடை செய்ய வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்