சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-06 04:49 GMT

சென்னை,

சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி இருந்தபோது முறைகேடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆட்சியராக இருந்தபோது அரசின் ரசீது புத்தகங்கள் வாங்கியதில் ரூ.1.31 கோடி முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாகீர் உசைன், வீரையா பழனிவேல் ஆகியோர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தவர் மலர்விழி ஐ.ஏ.எஸ். தற்போது, சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்