தொழிலாளர்களுக்கும் எனக்கும் எப்போதும் நட்பு உள்ளது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொழிலாளர்களுக்கும், எனக்கும் எப்போதும் நட்பு உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-18 15:14 GMT

சென்னை,

திமுகவின் தொழிற்சங்க அமைப்பான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் 50ம் ஆண்டு பொன்விழா மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நமது போக்குவரத்து தொழிற்சங்களை சர்வதேச தொழிற்சங்களும் பாராட்டியுள்ளன. தொழிலாளர்களுக்கும் எனக்கும் எப்போதும் நட்பு உள்ளது.

தொழிலாளர் துறைக்கென்று தனி துறையை கலைஞர் கருணாநிதி உருவாக்கினார். மே 1 தொழிலாளர் தினத்தை பொதுவிடுமுறை நாளாக அறிவித்தது கலைஞர் கருணாநிதியின் மகத்தான சாதனைகளில் ஒன்று. தொழிலாள தோழர்கள் உழைப்போடு சேர்ந்து உங்கள் உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உங்களில் ஒருவனாக என்றும் இருப்பேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்