சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்தார்.
மதுரை ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள ஒருகல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிருபர்கள், கார் மீது பா.ஜனதா கட்சியினர் செருப்பு வீசியது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பழனிவேல் தியாகராஜன், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் உடலை அடக்கம் செய்வது குறித்து 2 நாட்களாக ராணுவ அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினேன்.
ராணுவ வீரரை நல்லடக்கம் செய்த இந்த நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேச விரும்ப வில்லை. அதற்கு இது சரியான தருணம் இல்லை. அதுபோன்ற அரசியல் செய்பவர்கள் யார்? என்பது மக்களுக்கு தெரியும். இது தொடர்பாக நாளை பேசுகிறேன்," என்றார்.