பார்க்கும் போதெல்லாம் தகாத வார்த்தைகள் பேசியதால் வெட்டி கொன்றேன்
பூதப்பாண்டி அருகே, பெயிண்டர் தன்னை பார்க்கும் போதெல்லாம் தகாத வார்த்தைகள் பேசியதால் அரிவாளால் வெட்டி கொன்றதாக கைதான விவசாயி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே, பெயிண்டர் தன்னை பார்க்கும் போதெல்லாம் தகாத வார்த்தைகள் பேசியதால் அரிவாளால் வெட்டி கொன்றதாக கைதான விவசாயி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.
பெயிண்டர் வெட்டி கொலை
பூதப்பாண்டி அருகே உள்ள நாவல்காடு நம்பியான்குளம் பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (வயது50), பெயிண்டர். இவருக்கு ஜான்சி (37) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நெல்சனுக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ரிச்சர்ட் (43) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி நாவல்காடு பகுதியில் திருமண விழாவில் இருவரும் கலந்து கொண்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
பின்னர் ரிச்சர்ட் வீடு திரும்பிய போது நம்பியான்குளம் பகுதியில் நெல்சன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரிச்சர்ட் தனது வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து நெல்சனை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் ரிச்சர்ட் அரிவாளுடன் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். ரிச்சர்ட் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த போது கூறியதாவது:-
பாதை பிரச்சினை
எனது சகோதரியின் வீடு நெல்சன் வீட்டின் அருகில் உள்ளது. இவர்கள் இடைேய பாைத தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனது சகோதரிக்கு ஆதரவாக நான் செயல்பட்டு வந்தேன். இதனால் எனக்கும் வில்சனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இதையடுத்த நெல்சன் என்னை பார்க்கும் போதெல்லாம் தகாத வார்த்தைகள் பேசி வந்தார். கடந்த 21-ந் தேதி நாவல்காடு பகுதியில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு ெசன்ற போதும் என்னிடம் தகராறு செய்தார். பின்னர் நான் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது நம்பியான்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்த வில்சன் என்னிடம் மீண்டும் தகராறு செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அரிவாளால் வெட்டினேன்
இதனால், வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்து சரமாரியாக வெட்டி கொன்றேன். பின்னர் போலீசார் என்னை தேடுவார்கள் என்று அஞ்சி, நேராக பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து ரிச்சர்டை போலீசார் பூதப்பாண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.