சேலம் செல்ல நான் தயாராகிவிட்டேன், நீங்கள் தயாரா?... தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,
இளைஞரணியின் எழுச்சி மிகுந்த 2-வது மாநாடு சேலத்தில் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. சேலத்திற்கு வர நான் தயாராகிவிட்டேன், நீங்கள் தயாரா?... இன்று வரை நான் கட்சித் தலைவராக செயல்படவில்லை, தலைமைத் தொண்டனாகத்தான் செயல்படுகிறேன். இளைஞரணி மாநாட்டின் நோக்கமே மாநில உரிமைகளை வென்றெடுப்பதுதான். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன.
எனது உடன்பிறப்புகளே! கழக உடன்பிறப்புகளே! கலைஞரின் உடன்பிறப்புகளே! சேலத்தில் எனது கண்கள் உங்களது முகங்களைத்தான் தேடும்! என அந்த வீடியோவில் கூறியுள்ளார். என தெரிவித்துள்ளார்.