பிரதமர் மோடியின் விருப்பத்தினாலேயே கோவையில் போட்டியிடுகிறேன் - அண்ணாமலை பேட்டி
2026-ல் ஆட்சி அமைக்கவே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
தமிழ்நாடு அரசியல் தான் எனக்கு முக்கியம்; டெல்லி அரசியலில் விருப்பம் இல்லை. பிரதமர் மோடியின் உத்தரவை மதித்து நடப்பவன் நான். பிரதமர் மோடியின் விருப்பத்தினாலேயே கோவை தொகுதியில் போட்டியிடுகிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பா.ஜ.க. வெல்லும். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையிலிருந்து ஆரம்பமாக வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 40 நாட்கள் தங்கி இருந்து பரப்புரை செய்தாலும் கோவையில் பா.ஜ.க. தான் வெல்லும். 2026-ல் ஆட்சி அமைக்கவே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.