இந்தியாவில் ஆல் - நியூ ஹுண்டாய் டுசான் அறிமுகம்! நெக்ஸ்ட் டிரைவ்ஸ் நவ்!

சிறப்பான, சொகுசு வசதிகள் நிறைந்த ஆல் - நியூ ஹுண்டாய் டுசான் - ஐ அறிமுகம் செய்திருக்கிறது...

Update: 2022-08-11 15:30 GMT
  • உலகளவில் அதிகம் விற்பனையாகும் இதனை இந்தியாவில் விற்பனை செய்ய ஹுண்டாய் மோட்டார் இந்தியா இலக்கு நிர்ணயித்திருக்கிறது
  • ஆல் - நியூ ஹுண்டாய் டக்சனுக்கான காத்திருப்பு காலம், 8-10 மாதங்கள் என்பதாக இருக்கும்.
  • இந்தியாவெங்கும் 125 நகரங்களில் உள்ள 246 ஹுண்டாய் சிக்னேச்சர் அவுட்லெட்களில் ஆல் - நியூ ஹுண்டாய் டுசான் கிடைக்கிறது.
  • இப்பிரிவில் 29 முதல் மற்றும் சிறந்த அம்சங்களுடன் வெளிவரும் ஆல் - நியூ ஹுண்டாய் டுசான், இப்பிரிவில் மிக நவீன, மேம்பட்ட SUVஆக திகழ்கிறது.
  • ஹுண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் - லெவல் 2 ADAS (19 அம்சங்கள்) மூலம் வாடிக்கையாளர்களுக்கு நிகரற்ற பாதுகாப்பு அனுபவத்தை ஆல் - நியூ ஹுண்டாய் டுசான் வழங்கும்.
  • 60-க்கும் அதிகமான ஹுண்டாய் ப்ளுலிங்க் அம்சங்களைக் கொண்டிருக்கும் ஆல் - நியூ ஹுண்டாய் டுசான் வழியாக வாடிக்கையாளர்கள் இதுவரை அனுபவித்திடாத மிகச்சிறப்பான கனெக்டட் கார் தொழில்நுட்ப அனுபவத்தைப் பெறமுடியும்.
  • 137 kW ஆற்றல் மற்றும் 416 Nm இழுவை சக்தியை வழங்கும் இப்பிரிவில் அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது
  • இப்பிரிவில் மிக நீளமான வீல்பேஸ் மற்றும் 4630 மி.மீ. என்ற மிகச்சிறந்த நீள அளவைக் கொண்டுள்ள ஆல் - நியூ ஹுண்டாய் டுசான் வழங்கும் இன்டர்ஸ்பேஸ் அனுபவம் மிகச்சிறப்பானது.
  • ஆல் - நியூ ஹுண்டாய் டுசான் - ன் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.27,69,700 – லிருந்து ஆரம்பமாகிறது.
  • இதன் அறிமுக தொலைக்காட்சி விளம்பரம்: https://youtu.be/E2gswhCWzoA

புது டெல்லி,

இந்நாட்டின் முதல் ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகள் வழங்குனர் மற்றும் தொடக்கத்திலிருந்தே மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL), சிறப்பான, சொகுசு வசதிகள் நிறைந்த ஆல் - நியூ ஹுண்டாய் டுசான் - ஐ அறிமுகம் செய்திருக்கிறது. ஹுண்டாய் நிறுவனத்தின் பிரதான SUV ஆக திகழும் ஆல் - நியூ ஹுண்டாய் டுசான், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நவீன இயக்கஆற்றலின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இந்தியாவில் எதிர்கால போக்குவரத்து உருமாற்றத்தை வரையறை செய்வதாக இது அமையும்.

ஆல் - நியூ ஹுண்டாய் டுசான் அறிமுக நிகழ்வின்போது பேசிய ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் - ன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. அன்சூ கிம், "எங்களது அதிக அன்புக்குரிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு பெருமகிழ்வைத் தருவதற்காக இந்தியாவின் நான்காவது தலைமுறை ஹுண்டாய் டுசான் - ஐ அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகத்தரம் வாய்ந்த SUV – ஐ இந்தியாவிற்கு அறிமுகம் செய்வதன் மூலம் எமது வாடிக்கையாளர்களின் அனுபவ வாய்ப்புகளை மறுவடிவமைப்பு செய்வதும், அவர்களது கற்பனைகளை தூண்டி விடுவதும் இந்த அறிமுகத்திற்கான எங்களது தொலைநோக்குத் திட்டமாகும். 2021-ம் ஆண்டில் ஹுண்டாய்க்கு உலகளவில் பெஸ்ட் - செல்லராக சாதனை படைத்த இது, இந்தியாவில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தன்வசப்படுத்தியிருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களது அனுபவத்தை உலகளாவிய அளவிற்கு நிகரானதாக கொண்டுவர மேம்பட்ட தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து இந்திய ஆட்டோமோட்டிவ் துறையை உருமாற்றம் செய்வதில் நாங்கள் தொடர்ந்து பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம். ஹுண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் அறிமுகத்தோடு எமது லெவல் 2 ADAS தொழில்நுட்பத்தின் வழியாக ஹுண்டாய் - ன் மிகச்சிறப்பான பொறியியல் திறன்களை நாங்கள் மீண்டும் ஒருமுறை உலகிற்கு காட்டியிருக்கிறோம்," என்று கூறினார்.

நெக்ஸ்ட் டிரைவ்ஸ் நவ்.

ஹுண்டாயின் உலகளாவிய வடிவமைப்பு அடையாளமான "சென்சுவஸ் ஸ்போர்ட்டினெஸ்" என்பதைச் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள ஆல்-நியூ ஹுண்டாய் டுசான், இந்த பிராண்டின் உலகளாவிய SUV பாரம்பரியத்தை, வலுவான இந்திய இணைப்பு அம்சங்களை பிரதிபலிக்கிறது. புரட்சிகரமான இயக்கத்திறன், நவீன அழகு, நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் எதிர்காலத்திற்கான தயார்நிலை என்பதை உள்ளடக்குவதாக டுசான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அடுத்து அவர்களால் என்ன செய்ய முடியுமென்று எப்போதும் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கும் சாதனையாளர்களின் சிறப்பான விருப்பத்தேர்வாக மேற்கூறப்பட்ட சிறப்பு அம்சங்களின் ஒருங்கிணைப்பு, ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் - ஐ ஆக்கியிருக்கிறது. இத்தகைய சிறந்த சாதனையாளர்களுக்கு இறுதிக்கோடு என்பது வெறும் தொடக்கம் மட்டுமே மற்றும் அவர்களது "நெக்ஸ்ட் டிரைவ்ஸ் நவ்" என்பதாகவே இருக்கிறது. முன்மாதிரியாக திகழ்வதற்கென்றே ஆல் - நியூ ஹுண்டாய் டுசான் உருவாக்கப்பட்டிருக்கிறது:

1. மிகப்பிரமாதமான வடிவமைப்பு

2. ப்ரீமியம் வசதிகள்

3. அடுத்த உயர்நிலை பாதுகாப்பு

4. அற்புதமான செயல்திறன்

5. மேம்பட்ட இன்ஃபோடெய்ன்மெண்ட் & இணைப்புநிலை

வடிவமைப்பின் உச்சநிலை

இந்தியாவில் SUV வாங்குபவர்களின் விருப்பங்களையும் மிஞ்சும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள ஆல்-நியூ டுசான் அதன் மஸ்குலர் க்ரீஸ் லைன்கள், பரந்துவிரிந்த ஹுட் ஆகியவற்றின் மூலம் சாலையில் கம்பீரமான தோற்றத்தை பறைசாற்றுகிறது. இதன் டார்க் குரோம் பாராமெட்ரிக் முன்புற கிரில், இதன் தோற்றத்தை மேலும் வலுவாக்குகிறது; இதன் முன்புற ஸ்கிட் பிளேட், இந்த SUV – க்கு திடகாத்திர பண்பியல்பை தருகிறது. இதன் தனித்துவமான LED MFR முகப்பு விளக்குகள், நவீன தொழில்நுட்பத்தை அழகு மற்றும் செயல்திறனுடன் நேர்த்தியாக சேர்த்து தருகிறது. இதன் பாராமெட்ரிக் ஹிட்டன் LED DRL கள் மற்றும் பொசிஷனிங் லேம்ப்களைக் கொண்டிருக்கும் டார்க் குரோம் பாராமெட்ரிக் முன்புற கிரில், ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் - ன் உண்மையிலேயே ஒரு தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்துகிறது.

ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் - ன் கம்பீரத்தை முன்னிலைப்படுத்துவதாக இதன் "Z" வடிவிலான பக்கவாட்டு பண்பியல்புகள் கம்பீரமான தோற்றத்தை வலியுறுத்துமாறு இருக்கிறது. இதன் பிராட் சைடு கிளாடிங் மற்றும் 235/60 R18 (D= 462 mm) டைமண்டு கட் அலாய், இக்காரை கவர்ச்சியானதாகவும், அதே வேளையில் ஸ்போர்ட்டியானதாகவும் ஆக்குகிறது. இதன் ரூஃப் ரெய்ல்களும், பார்வையை ஈர்க்கும் சாட்டின்; குரோம் DLO மோல்டிங்கும் இந்த SUV – ன் தனித்துவக் கவர்ச்சியை மேலும் அதிகமாக்குகின்றன.

கனெக்டிங் LED டெய்ல் லேம்ப்களை கொண்டிருக்கும் ஆல்-நியூ ஹுண்டாய் டுசான், சொகுசான, அதே வேளையில், ஹை - டெக் ஈர்ப்பு அம்சத்துடன் பரவலான இடப்பரப்பை வெளிப்படுத்துகிறது. சிறப்பான கைவினைத்திறனை காட்சிப்படுத்தும் டுசான், பின்புற கண்ணாடிக்கு கீழே முப்பரிமாண லோகோ கார்னிஷை கொண்டிருக்கிறது. இதன் பாராமெட்ரிக் பேட்டன் பம்ப்பர் செயலாக்கத்திறனை நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது. வாஷருடன் கூடிய, மறைக்கப்பட்ட நிலையில் உள்ள ரியர் வைப்பர் ஹுண்டாயின் புத்தாக்கத் திறனுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. SUV-ன் ஸ்போர்ட்டி பண்பியல்புகளை வலுப்படுத்தும் விதமாக எல்இடி ஹை மவுண்ட் ஸ்டாப் லேம்ப் மற்றும் ஷார்க் ஃபின் ஆண்டெனா ஆகியவற்றுடன் கூடிய ரியர் ஸ்பாய்லர் அமைக்கப்பட்டிருக்கிறது.

இன்டர்ஸ்பேஸ்

புதுயுக ப்ரீமியம் SUV வாகனத்தை தேடுபவர்களின் பேரார்வங்களை ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் பொருள் வரையறை செய்கிறது. எதிர்காலத்திற்குரிய மற்றும் புரட்சிகரமான புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ள இது, மேம்பட்ட தொழில்நுட்பத்தின் நேர்த்தியான ஒத்திசைவை நவீன செயலாக்கத்திறனுடன் இணைத்துத் தருகிறது. இதன் விளைவாக இடவசதி, தொழில்நுட்பம் மற்றும் தகவல் ஆகியவை இயற்கையாகவே ஒருங்கிணைகின்ற கேபினுக்கு உட்புற அனுபவம் அற்புதமானதாக ஆகிவிடுகிறது.

ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் - ன் கேபின் மிகவும் மேம்பட்ட பயனாளி இன்டர்ஃபேஸ் மற்றும் ப்ரீமியம் பிளாக் மற்றும் லைட் கிரே இரட்டை வண்ண உட்புற அலங்காரத்தின் மூலம் ஹுண்டாயின் வடிவமைப்பு கைவினைத்திறனை அழகாக காட்சிப்படுத்துகிறது. கிராஷ்பேட் மற்றும் கதவுகளின் மீதுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட சில்வர் ஆக்சென்ட்கள் தனித்துவமான தோற்றத்தை உருவாக்குகின்றன் இந்த SUV – ன் சொகு அம்சத்தை இதிலுள்ள சாஃபட் டச் பொருட்கள் அதிகமாக்குகின்றன.

சாஃப்ட் டச் டோர் பேனல்கள், இதன் தனிச்சிறப்பான மெட்டல் இன்செட்கள் கேபினின் சொகுசு வசதியை உயர்த்திக் காட்டுகின்றன. தங்களது மனநிலைகள் மற்றும் தருணங்களுக்குப் பொருத்தமாக பயனாளிகளாலேயே மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய 64 வண்ண ஆம்பியன்ட் லைட்டிங் விருப்பத்தேர்வை டுசான் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. பியானோ பிளாக் சென்டர் ஃபேசியா, கேபினின் செழுமையை அதிகரித்து, SUV – ன் ப்ரீமியம் டிசைன் கருத்தியலின் நேர்த்தியாக கலவையாக திகழ்கிறது.

வேறு எதிலும் கிடைக்காத அற்புத அனுபவம்

ஹை-டெக் மற்றும் மேம்பட்ட வசதி அம்சங்களுடன் சௌகரியம் என்பதனை ஆல்-நியூ ஹுண்டாய் டுசான், மறுவரையறை செய்கிறது. உண்மையிலேயே ஸ்மார்ட்டான டிரைவிங் அனுபவத்தை வழங்கும் இந்த SUV – ல் 26.03 cm (10.25") ஃபுளோட்டிங் டைப் டிஜிட்டல் கிளஸ்டர் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் எளிமையான கவர்ச்சியை பெரிதாக்கும் அதே வேளையில், மேம்பட்ட மற்றும் நவீன வடிவமைப்பு தன்மையையும் டுசான் வெளிப்படுத்துகிறது. பல்வேறு வகை தகவலை காட்சிப்படுத்தும் கிளஸ்டர், இந்த ஹை-டெக் டிஜிட்டல் காக்பிட் உணர்வை இன்னும் உயர்த்துகிறது. தனிப்பட்ட கருப்பொருட்கள் டர்ன்-பை-டன் நேவிகேஷன், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் டிஸ்பிளே, டிரைவ் மோட் செலக்ட் (நார்மல் / எக்கோ / ஸ்போர்ட் / ஸ்மார்ட்) மற்றும் மல்ட்டி டெரைய்ன் மோட்கள் (பனி / களிமண் / மணல்) ஆகியவற்றை டிஜிட்டல் கிளஸ்ட்டர் காட்சிப்படுத்துகிறது.

காரில் பயணிப்பவர்களுக்கு மிக அதிக உயர்ந்த அளவிலான சௌகரியத்தை உறுதிசெய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட காலநிலை கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. விமானங்களில் பயன்படுத்தப்படும் மல்ட்டி ஏர் மோடு என்ற தொழில்நுட்பம், பல்வேறு வென்ட்களிலிருந்து உண்மையான காற்றை பரவவிட்டு, உயர்தர சௌகரியத்தையும், கட்டுப்பாட்டையும் தருவதாக இப்பிரிவில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது. ஆட்டோ டீஃபாகர் உடன் டூயல் ஜோன் FATC (முற்றிலும் தானியக்க வெப்பநிலை கட்டுப்பாடு), கேபினுக்குள் இரண்டு வெப்பநிலை பிரிவுகளை நிறுவுவதன் மூலம் வசதியை மேம்படுத்துகிறது. ஆல்-நியூ ஹுண்டாய் டுசான், முன்புறத்தில் வெண்ட்டிலேட்டர் மற்றும் ஹீட்டட் இருக்கைகளைக் கொண்டிருக்கிறது. பயணியர்கள் அமர்ந்திருக்கும்போது உகந்த இருக்கை வெப்பநிலையை பேணுவதன் மூலம் சௌகரியத்தின் மிக உயர்ந்த நிலையை இது உறுதி செய்கிறது. இந்த செயல்பாட்டு அம்சத்தை வாய்ஸ் கமாண்டுகளின் வழியாகவும் கட்டுப்படுத்தலாம்.

செழுமையான மற்றும் சொகுசான அனுபவத்தை உறுதிசெய்யும் அம்சங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நிகரற்ற ப்ரீமியம் அனுபவத்தை ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் வழங்குகிறது. வாய்ஸ் எனேபில்டு ஸ்மார்ட் பனோரமிக் சன்ரூஃப் ஒருங்கிணைப்பின் மூலம் கட்டுப்பாட்டின் சௌகரியத்தோடு அற்புதமான ஸ்மார்ட் மொபிலிட்டி அனுபவத்தையும் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். கீழ்க்கண்ட ஸ்மார்ட் மற்றும் ப்ரீமியம் அம்சங்கள் ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் - ல் இடம்பெற்றுள்ளன:

• போஸ் ப்ரீமியம் சவுண்டு & ஸ்பீக்கர் சிஸ்டம்

• ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஸ்மார்ட் பவர் டெய்ல் கேட் - உயர அட்ஜெஸ்ட்மென்ட் வசதியுடன்

• டிரைவர் பவர் சீட் மெமரி ஃபங்ஷன்

• எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்

• வயர்லெஸ் போன் சார்ஜர்

• ரெயின் சென்சிங் வைப்பர்கள்

• ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் - ஸ்மார்ட் கீ உடன்

• முதுகுப் பகுதிக்கான ஆரவுடன் 10-வழிமுறை பவர் அட்ஜஸ்டபிள் ஓட்டுனர் இருக்கை

• 8 வழிமுறைகளில் பவர் அட்ஜெஸ்டபிள் பயணியர் இருக்கை

வடிவமைப்பு அறிவியல் ரீதியாக உருவாக்கப்பட்ட கேபின் லேஅவுட்கள், அதிகபட்ச உட்புற இடப்பரப்பு மற்றும் சௌகரியம் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தாராளமான இருக்கை மற்றும் இடவசதியை ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட மற்றும் பெரிய இருக்கை அமைவிடத்துடன் தாராளமான 2வது வரிசை லெக்ரூம் இணையற்ற சௌகரியத்தை தருகிறது. SUV – ன் நீண்ட வீல்பேஸ் - ன் காரணமாக, அதிகரிக்கப்பட்ட இடவசதி இதனால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் கீழ்க்கண்ட அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

• சாய்ந்துகொள்ளும் வசதியுடன் 2வது வரிசை இருக்கை

• லக்கேஜ் வைப்பதற்கு மிகப்பெரிய இடவசதி

• பயணியர் இருக்கை வாக்-இன் சாதனம்

• 2வது வரிசை இருக்கையை மடிப்பதற்கு – பூட் லீவர்

• 60:40 என குறிக்கும் மடிக்கக்கூடிய பின்புற இருக்கை

கனெக்டிவிட்டி (இணைப்பு) வசதியில் புதிய நிலை

நுகர்வோர்களின் நவீன யுக தேவைகளை பூர்த்தி செய்கின்ற மேம்பட்ட தீர்வுகளின் மூலம் உண்மையிலேயே இணைப்பு நிலை அனுபவத்தை ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் வாடிக்கையாளர்களுக்கு தருகிறது. ஹுண்டாய் ப்ளுலிங்க் - ன் மூலம் சிரமமே இல்லாத மூன்றாவது ஸ்பேஸ் அனுபவத்தை வழங்குகின்ற எம்பேடட் வாய்ஸ் ரெக்கக்னிஷன் கமாண்டுகள் மற்றும் ஓவர் தி ஏர் அப்டேட்களை (அமைப்பு மற்றும் வரைபடம்) தருகிறது.

சௌகரியத்தை மேம்படுத்துவதோடு, SUV – ன் ஹைடெக் கேபின் அனுபவத்தை வலுப்படுத்துகின்ற ஒரு 26.03 செ.மீ (10.25") HD ஆடியோ வீடியோ நேவிகேஷன் சிஸ்டம், இதில் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் கீழ்க்கண்டவற்றை வழங்குகிறது:

• ஹை டெஃபனிஷன் வைட் ஸ்கிரீன்

• ஸ்பிலிட் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

• எம்பெடெட் வாய்ஸ் கமாண்ட்ஸ்

• ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி (ஆண்ட்ராய்டு ஆட்டோ / ஆப்பிள் கார் ப்ளே)

• ஃபுல் டச் சென்டர் ஃபேசியா இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் ஏசி கன்ட்ரோல்ஸ்

• மல்டி லேங்வேஜ் சப்போர்ட் (10 பிராந்திய மொழிகள் மற்றும் 2 உலகளாவிய மொழிகள்)

• அலெக்சா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட்டுடன் ஹோம்-டு-கார் (H2C) இந்தி மற்றும் ஆங்கிலத்தில் (இப்பிரிவில் முதல் முறையாக)

• ஓவர் தி ஏர் அப்டேட்கள் (அமைப்பு மற்றும் வரைபடம்)

• இயற்கையின் சூழல் ஓசைகள்

• வேலட் மோட்

• பெர்சனலைசேஷனுக்கான யூசர் புரொபைல்ஸ்

60-க்கும் அதிகமான கனெக்டட் கார் அம்சங்களை வழங்கும் ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் மிக அற்புதமான கனெக்டட் கார் அனுபவத்தை உருவாக்குகிறது. 3 ஆண்டுகளுக்கு இலவச ப்ளுலிங்க் சப்ஸ்கிரிப்ஷனுடன் ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் வழங்கப்படுகிறது; மேலும், iழுளுஇ ஆண்ட்ராய்ட் ழுளு மற்றும் டைஸனுக்கு ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு வசதியையும் இது கொண்டிருக்கிறது.

உள்ளுணர்வுடன் கூடிய பாதுகாப்பு

ஹுண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் (ADAS), சென்ஸ் உடன் நவீன பாதுகாப்பு அம்சங்களின் கலவையின் வழியாக, பாதுகாப்பின் அடுத்த உயர்நிலையின் உருவகமாக ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் திகழ்கிறது. 3வது தலைமுறை N3 பிளாட்ஃபார்ம் மீது உருவாக்கப்பட்டுள்ள டுசான், சிறந்த சேசிஸ் வலுவையும் மற்றும் மிக உயர்ந்த பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. நிகரற்ற கேபின் பாதுகாப்பு இதில் கிடைக்கிறது. இந்த காரின் பாடி கட்டமைப்பு, AHSS (மேம்பட்ட உயர் வலிமையான ஸ்டீல்) & HSS (அதிக வலிமையான ஸ்டீல்) பயன்பாட்டை ஒருங்கிணைத்திருக்கிறது. ஒரு மோதல் சம்பவம் நேரும்போது, மிக உயர்ந்த பாதுகாப்பை உறுதிசெய்ய ஹாட் - ஸ்டாம்பிங் - ன் விரிவான பயன்பாடு உதவுகிறது.

இதன் வகையினத்தில் தொழில்நுட்பத்தின் சிகரமாக அமைந்திருக்கும் ஆல்-நியூ ஹுண்டாய் டக்சனில் நிலை 2 ADAS திறனுடன் கூடிய ஹுண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் இடம்பெற்றுள்ளது. கேமரா மற்றும் ரேடார் சென்சார்களுடன் கூடிய தானியக்க உயர்திறன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆல்-நியூ ஹுண்டாய் டுசான், சாலையில் வருகின்ற ஒரு வாகனம், பாதசாரி அல்லது சைக்கிள் ஓட்டுனரை கண்டறிய இயலும் என்பதால், முழுமையான பாதுகாப்பை தருகிறது. ஸ்மார்ட் மற்றும் உள்ளுணர்வு தொழில்நுட்பம் கொண்டுள்ள டுசான், கீழ்க்கண்டவை போன்ற 19 ஹுண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் (ADAS) அம்சங்களை வழங்குகிறது:

வாகனத்தை இயக்கும்போது (டிரைவிங்) பாதுகாப்பு அம்சங்கள்:

• ஃபார்வர்டு (முன்னோக்கி) மோதல் எச்சரிக்கை

• ஃபார்வர்டு மோதல்-தவிர்ப்பு உதவி- கார்

• ஃபார்வர்டு மோதல்-தவிர்ப்பு உதவி- பாதசாரி

• ஃபார்வர்டு மோதல்-தவிர்ப்பு உதவி- சைக்கிள்

• ஃபார்வர்டு மோதல்-தவிர்ப்பு உதவி- சந்திப்பு திருப்பம்

• பிளைண்ட்-ஸ்பாட் மோதல் எச்சரிக்கை

• பிளைண்ட்-ஸ்பாட் மோதல்- தவிர்ப்பு உதவி

• லேன் கீப்பிங் அசிஸ்ட்

• லேனிலிருந:து விலகும்போது எச்சரிக்கை

• ஓட்டுனர் கவனத்திற்கான எச்சரிக்கை

• ப்ளைண்ட்-ஸ்பாட் வியூ மானிட்டர்

• பாதுகாப்பான வெளியேறலுக்கு எச்சரிக்கை

டிரைவிங் சௌகரிய அம்சங்கள்:

• ஸ்டாப் & கோ உடன் ஸ்மார்ட் குரூஸ் கண்ட்ரோல்

• லேன் ஃபாலோயிங் அசிஸ்ட்

• ஹை பீம் அசிஸ்ட்

• முன்புற வாகனம் வெளியேறலுக்கான எச்சரிக்கை

பார்க்கிங் பாதுகாப்பு அம்சங்கள்:

• ரியர் கிராஸ் -போக்குவரத்து மோதல் எச்சரிக்கை

• ரியர் கிராஸ் -போக்குவரத்து மோதல்-தவிர்ப்பு உதவி

• சரவுண்ட் வியூ மானிட்டர்

மேலும், காரை பார்க்கிங் செய்யும்போது அல்லது திருப்புகின்றபோது அதன் சுற்றுப்புறங்களின் 360 டிகிரி தோற்றத்தைக் காட்டுவதன் மூலம் பாதுகாப்பு அளவை அதிகரிக்கின்ற சரவுண்டு வியூ மானிட்டர் போன்ற செயல்பாட்டு அம்சங்களையும் டுசான் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. கூடுதலாக லேன்களை மாற்றுவதற்கு அல்லது வாகனத்தை திருப்புவதற்கு டர்ன் இன்டிகேட்டரை ஓட்டுனர் பயன்படுத்தும்போது தானாக செயல்பாட்டிற்கு வருகின்ற பிளைண்டு - ஸ்பாட் வியூ மானிட்டர் (BVM) என்பதும் இந்த SUV – ல் பொருத்தப்பட்டுள்ளது. 45-க்கும் அதிகமான மேம்பட்ட ஆக்டிவ் மற்றும் பாசிவ் பாதுகாப்பு அம்சங்களை ஸ்டான்டர்டு அம்சங்கள் வடிவில் வாடிக்கையாளருக்கு அடுத்தநிலை பாதுகாப்பை ஹட்சன் வழங்குகிறது. மொத்தத்தில் 60-க்கும் கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கீழ்க்கண்டவற்றையும் உள்ளடக்கும்:

• 6 ஏர்பேகுகள் (ஃபிரன்ட் டூயல், சைட் & கர்டெயின் ஏர்பேகுகள்)

• முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள்

• எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்

• ஹில் டெஸ்சென்ட் கண்ட்ரோல்

• ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல்

• ஆல் டிஸ்க் பிரேக்ஸ்

• BVM (பிளைண்ட்-ஸ்பாட் வியூ மானிட்டர்) / SVM (சரவுண்டு வியூ மானிட்டர்)

எதிர்பார்ப்புகளையும் மிஞ்சும் சிறப்பான பொறியியல்

துடிப்பான டிரைவிங் அனுபவத்தை வழங்க எதிர்கால தேவைகளுக்குத் தயார்நிலையில் உள்ள சக்தி வாய்ந்த நவீன பவர் ட்ரெய்ன்கள், ஆல்-நியூ ஹுண்டாய் டக்சனில் இடம்பெற்றுள்ளன. மிகச்சிறப்பான எரிபொருள் திறனைக் கொண்டிருப்பதோடு, உயர் செயல்திறனை சாத்தியமாக்குகின்ற இந்த நவீன பவர் ட்ரெய்ன்கள் RDE இணக்கநிலை கொண்டதாக, எதிர்கால தேவைகளுக்குப் பொருத்தமானவையாக இருக்கின்றன. ஆல்-நியூ ஹுண்டாய் டுசான், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய நியூ 2.0 பெட்ரோல் இன்ஜின் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய R2.0 டீசல் இன்ஜின் மூலம் இயக்க ஆற்றலைப் பெறுகிறது.

இன்ஜின் திறன் (CC) அதிகபட்ச சக்தி (PS/RPM) அதிகபட்ச இழுவிசை (KGM/RPM) டிரான்ஸ்மிஷன்

Nu 2.0 பெட்ரோல் 1 999 114.7 kW (156 Ps) @ 6200 rpm 192 Nm (19.58 kgm) @ 4500 rpm 6 ஸ்பீடு AT

R 2.0 டீசல் 1 997 137 kW (186 PS) @ 4000 rpm 416 Nm (42.42 kgm) @ 2000~2750 rpm 8-ஸ்பீடு AT

அற்புதமான உயர்நிலை டிரைவிங் அனுபவம்

நிலைப்புத்தன்மையுள்ள மற்றும் சமநிலையான டிரைவிங் அனுபவத்தின் வழியாக ஓட்டுனருக்கு உயர் அளவிலான நம்பிக்கையை ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் உறுதி செய்கிறது. முன்புற சஸ்பென்ஷனில் ஒரு மெக்பெர்சன் ஸ்ட்ரட் மற்றும் பின்புற சஸ்பென்ஷனில் ஒரு காயில் ஸ்பிரிங்குடன் கூடிய மல்ட்டி-லிங்க் இடம்பெற்றுள்ளன. முன்புற சஸ்பென்ஷனுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் வடிவியல், குறைந்தபட்ச பாடி ரோலுக்காக, உயர்வான ரோல் சென்டரையும் ரஃப் ரோல் மீது N.V.H தனிமைப்படுத்தலுக்காக அதிகரிக்கப்பட்ட நக்கில் ஆர்ம் நீளத்தையும் மற்றும் மிருதுவான ஸ்டியரிங் உணர்விற்காக புதிய சாய்கோண ஸ்ட்ரட்டையும் கொண்டிருக்கிறது. பம்ப் / ரோல் ஸ்டியரை அதிகரித்திருப்பதன் வழியாகவும், சிறப்பான இரண்டாம்நிலை அதிர்வு செயல்திறனுக்காக உகந்த மெம்பர் மவுண்ட்களையும், உறுதியாக்கப்பட்ட மஃப்ளர் ஹேங்கரையும் பின்புற சஸ்பென்ஷன் கொண்டிருக்கிறது.

த்ரில்லிங்கான அனுபவத்தை வழங்கும் அதே வேளையில், பாதுகாப்பான டிரைவிங்கை சாவல்மிக்க தரைப்பரப்புகளிலும் ஏதுவாக்குகின்ற மல்ட்டி டெரைன் மோட்ஸ் (பனி / களிமண் / மணல்) அம்சத்தோடு ஆல்-நியூ ஹுண்டாய் டக்சனில் HTRAC ஆல்-வீல் டிரைவ் (AWD) சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த AWD சிஸ்டம், தரைப்பரப்பின் பிடிமானத்தன்மை மற்றும் டிரைவிங் நிலையை அடையாளம் கண்டு இழுவிசை டெலிவரியை AWD கப்ளிங் கிளட்சிற்கு துல்லியமாக வழங்குகிறது; இது, இயக்க ஆற்றலை தேவைப்பாடுகளின்படி முன்புற மற்றும் பின்புற வீல்களுக்கு பகிர்ந்தளிக்கிறது.

இவ்வகையினத்தில் 29 முதல் மற்றும் சிறந்த அம்சங்கள்:

• இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் மூலம் ஹோம்-டு-கார் (H2C)

• ஸ்மார்ட் கீ உதவியுடன் ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட்

• மல்டி ஏர் மோட்

• போஸ் பிரீமியம் சவுண்ட் 8 ஸ்பீக்கர் சிஸ்டம்

• டோர் பாக்கெட் லைட்டிங்

• பாசன்ஜர் சீட் வாக்-இன் டிவைஸ்

• ஹூண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் (16)

o ஃபார்வர்டு (முன்னோக்கிய) மோதல் எச்சரிக்கை

o ஃபார்வர்டு மோதல்-தவிர்ப்பு உதவி- கார்

o ஃபார்வர்டு மோதல்-தவிர்ப்பு உதவி- பாதசாரி

o ஃபார்வர்டு மோதல்-தவிர்ப்பு உதவி- சைக்கிள்

o ஃபார்வர்டு மோதல்-தவிர்ப்பு உதவி- சந்திப்பு திருப்பம்

o லேன் கீப்பிங் அசிஸ்ட் (LKA)

o லேனிலிருந்து விலகும்போது எச்சரிக்கை

o பிளைண்ட்-ஸ்பாட் மோதல்- தவிர்ப்பு உதவி (BCA)

o சேஃப்டி எக்ஸிட் வார்னிங் (SEW)

o லீடிங் வெஹிக்கில் டிபார்ச்சர் அலெர்ட் (LVDA)

o ஹை பீம் அசிஸ்ட் உதவி (HBA)

o ஸ்டாப் & கோ மூலம் ஸ்மார்ட் குரூஸ் கட்டுப்பாடு

o லேன் ஃபாலோயிங் அசிஸ்ட் (LFA)

o பின்புற குறுக்கு - போக்குவரத்து மோதல் எச்சரிக்கை (RCCW)

o பின்புற குறுக்கு- போக்குவரத்து மோதல்- தவிர்ப்பு உதவி (RCCA)

o பிளைண்ட்-ஸ்பாட் வியூ மானிட்டர் (BVM)

• 26.03 செமீ (10.25") HD ஆடியோ வீடியோ நேவிகேஷன் சிஸ்டம்

• இவ்வகையினத்தில் மிக நீளமானது

• மிக நீள வீல்பேஸ்

• DSL இன்ஜினில் அதிக ஆற்றல்

• DSL இன்ஜினில் அதிக முறுக்குவிசை

• 64 வண்ண மூட் லைட்டிங்

• ஹுண்டாய் ப்ளு லிங்க் (6010 அம்சங்கள்)

முழுமையான மன நிம்மதி

மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் தரமான நேரத்தை செலவிட வாடிக்கையாளர்களுக்கு உயர்வான மனநிம்மதியை ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் வழங்குகிறது. 3 ஆண்டுகள் வரம்பற்ற கி.மீ. வாரண்ட்டி மற்றும் சாலையோர வசதி (RSA) ஆகியவற்றினால் ஆல்-நியூ ஹுண்டாய் டக்சனில் சொந்தமாக கொண்டிருக்கும் இனிய அனுபவத்தை மனநிம்மதியோடு வாடிக்கையாளர்கள் பெறமுடியும். வாடிக்கையாளரை மையமாக கொண்ட ஹுண்டாயின் மைய நோக்கத்தை மேலும் நிரூபிக்க 3 ஆண்டுகள் அல்லது 30,000 கி.மீ. காம்ப்ளிமென்ட்ரி (அன்பளிப்பு) பராமரிப்பு சேவை மற்றும் டெலிவரி செய்யப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் ஒரு ஹோம் விசிட் ஆகியவற்றோடு சேர்த்து ஆல் நியூ டுசான் வழங்கப்படும். கூடுதலாக, 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டி விருப்பத்தேர்வுகள், ஹுண்டாய் ஷீல்டு ஆஃப் டிரஸ்ட் கார் கேர் & மெயிண்டெனன்ஸ் பேக்கேஜ்களை இவ்வகையினத்தில் மிகக்குறைந்த பராமரிப்பு கட்டணத்தின் மூலம் பெற்று பயன் பெறலாம்.

ஆக்சஸரிஸ்:

ப்ரீமியம் வாகனத்தின் முதன் முறையாக ஹுண்டாய் டக்சனுக்காக, 16 ஆக்சஸரிஸ் என்ற விரிவான தொகுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளரது விருப்பங்கள், அழகிய அம்சங்கள் மற்றும் காரின் ப்ரீமியம் பண்பியல்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆக்சஸரீஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

வண்ணங்கள்

ஆல்-நியூ ஹுண்டாய் டுசான், 5 ஒற்றை நிற வண்ண விருப்பத்தேர்வுகளில் கிடைக்கிறது; போலார் ஒயிட், பாண்டம் பிளாக், அமேசான் கிரே (புதிய & பிரத்யேகமான), ஸ்டாரி நைட் மற்றும் ஃபியரி ரெட் ஆகியவை இதில் உள்ளடங்கும். போலார் ஒயிட் உடன் பேண்டம் பிளாக் ரூஃப் மற்றும் ஃபியரி ரெட் உடன் பேண்டன் பிளாக் ரூஃப் ஆகியவற்றை உள்ளடக்கிய 2 இரட்டை வண்ண விருப்பத்தேர்வுகளில் ஒன்றையும் வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம்.

ஆல்-நியூ ஹுண்டாய் டுசான் - ன் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை:

"ஆல் நியூ ஹுண்டாய் டுசான்" சுனுநு இணக்கநிலை இன்ஜின் விருப்பத்தேர்வுகளான ரே 2.0 | பெட்ரோல் & R 2.0 டீசல் என்பவற்றோடு கிடைக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும்போது, 4WD விருப்பத்தேர்வுடன் சேர்த்து 8 ஸ்பீடு ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் 2.0 டீசல் இன்ஜின் கிடைக்கும். அனைத்து விலைகளிலும் அறிமுக சிறப்பு விலைகளாகும் மற்றும் இந்தியா முழுவதும் ஒரே விலையில் (எக்ஸ்-ஷோரூம்) இது கிடைக்கிறது.

2.0 / பெட்ரோல் அணிவரிசை 2 வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. ரூ.27 69 700 என்ற கவர்ச்சிகரமான விலையில் 4510 பாதுகாப்பு & 6010 ப்ளுலிங்க் கனெக்டட் கார் அம்சங்களுடன் பிளாட்டினம் AT ட்ரிம் வேரியண்ட் கிடைக்கிறது. 2.0 பெட்ரோல் சிக்னேச்சர் AT வேரியண்ட், 19 ஹுண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் நிலை 2 பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்களையும், டுநுனு ஹெட்லேம்ப்கள், LED டெய்ல் லேம்ப்கள், 10-வழிமுறைகளில் பவரின் மூலம் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய ஓட்டுனர் இருக்கை போன்ற ஹைடெக் மற்றும் வசதி அம்சங்களுடன் ரூ.30 17 000 என்ற விலையில் கிடைக்கிறது.

சுற்றுச்சூழலுக்குத் தோழமையான, சிறப்பான 2.0 / டீசல் இன்ஜின், 3 வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. 26.03 செ.மீ. (10.25") டச் ஸ்க்ரீன் ஆடியோ, டிஜிட்டல் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (EPB) ஆகியவற்றை ஸ்டான்டர்டு அம்சங்களாக கொண்டிருக்கும் பிளாட்டினம் AT வேரியண்ட், ரூ.30 19 700 என்ற வியக்கவைக்கும் விலையில் வழங்கப்படுகிறது. சிக்னேச்சர் AT ரூ.32 87 000 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த அணிவரிசையில் முதலிடம் வசிக்கும் சிக்னேச்சர் AT 4WD ஹுண்டாயின் HTRAC தொழில்நுட்பம் மற்றும் மல்ட்டி டெரைன் மோடு வசதிகளோடு ரூ.34 39 000 என்ற விலையில் கிடைக்கிறது.

சிக்னேச்சர் ட்ரிம்களுக்கு ட்யூயல் டோன் வெளிப்புற வண்ண விருப்பத்தேர்வு ரூ.15,000 என்ற கூடுதல் விலையில் கிடைக்கிறது.

60-க்கும் அதிகமான ப்ளுலின்க் இணைப்புள்ள கார் அம்சங்கள்

எண் வகையினம் சர்வீஸ்கள்

1 தற்காப்பு அட்வான்ஸ்டு ஆட்டோ கொலிஷன் நோட்டிஃபிகேஷன் (AACN)

2 SOS

3 சாலையோர உதவி (RSA)

4 வேலட் பயன்முறை

5 பாதுகாப்பு திருடப்பட்ட வாகனம் மீதான கண்காணிப்பு

6 திருடப்பட்ட வாகனம் குறித்த அறிவிக்கை

7 திருடப்பட்ட வாகனத்தை முடக்குதல்

8 ரிமோட் ரிமோட் முறையில் எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப்

9 ரிமோட் முறையில் பருவநிலை கட்டுப்பாடு

10 ரிமோட் முறையில் கதவை பூட்டுதல்/திறத்தல்

11 ரிமோட் முறையில் ஹார்ன் + லைட் கட்டுப்பாடு

12 ரிமோட் முறையில் வாகன நிலையை அறிதல்

13 தன்முனைப்பு வாகன நிலை எச்சரிக்கை

14 டயர் அழுத்த தகவல்

15 எரிபொருள் அளவு தகவல்

16 ஃபைண்ட் மை கார் அம்சம்

17 APPI - ஐ பயன்படுத்தி எனது காரைப் பகிர்தல்

18 VRM தானியக்க முறையில் DTC குறைபாடுகளை கண்டறிதல்

19 மேனுவல் முறையில் DTC குறைபாடுகளை கண்டறிதல்

20 காரின் நலம் குறித்து மாதாந்திர அறிக்கை

21 பராமரிப்பு சேவைக்கான முன்னெச்சரிக்கை

22 ஓட்டும் செயல்முறை மீதான தகவல் & நடத்தை

23 முன்னெச்சரிக்கை ஜியோ-ஃபென்ஸ் எச்சரிக்கை

24 வேக எச்சரிக்கை

25 டைம் ஃபென்சிங் எச்சரிக்கை

26 வாலட் எச்சரிக்கை

27 செயலற்ற நிலை (Idle) மீதான எச்சரிக்கை

28 அமைவிட அடிப்படையிலான சேவைகள் சேருமிட தகவல்களை காருக்கு அனுப்புதல் (வழி/வழி அமைவிடங்கள்)

29 நிகழ்நேர POI தேடல்

30 நிகழ்நேர போக்குவரத்து தகவல்

31 சேருமிடத்தைப் பகிர்தல் (சாதனத்திலிருந்து)

32 நிகழ்நேர வாகன தடமறிதல்

33 வாகன இருப்பிட தகவல் பகிர்வு & தடமறிதல்

34 காலஅட்டவணையுடன் இணைக்கப்பட்ட சேருமிட செட்டிங்

35 இறுதியாக சேருமிடத்திற்கான வழிகாட்டல்

36 VR POI POI 10 அமைவிடம்

37 VR காலிங் ஒன் டச் POI & சேருமிடத்திற்கான தேடல் (IRVM பட்டன்)

38 பெயரைக் கொண்டு டயல் செய்தல்

எண்ணைக் கொண்டு டயல் செய்தல்

39 எஸ்எம்எஸ்

40 தேடல் செட்டிங்

41 VR வரைபட கண்ட்ரோல் வரைபடத்தைக் காண்பித்தல், பாதையை ரத்து செய்தல், சேருமிடத்தை காட்டுதல், தகவல் முதலியன.,

42 VR வானிலை இன்றைய தினம், கடந்த காலம், எதிர்காலம் (+9 நாட்கள்) அமைவிட தகவல்

43 VR நேரம் & தேதி நேரம் & தேதி, நாடுகளுக்கு இடையே நேர வேறுபாடுகள்

44 VR விடுமுறைகள் இந்திய விடுமுறை நாட்கள் குறித்து தகவல்

45 VR மீடியா மீடியாவை ஓப்பன் செய்வது

புளூடூத் ஆடியோவைத் தேர்வுசெய்வது

USB-ஐ தேர்வுசெய்வது

FM வானொலி

AM வானொலி

93.5 "அலைவரிசைக்கு" டியூன் செய்வது

46 VR ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்

47 கால்பந்து

48 VR கார் கட்டுப்பாடு வானிலை கட்டுப்பாடு

49 சன்ரூஃப் கட்டுப்பாடு

50 காற்றடிக்கும் திசை

51 டீஃப்ராஸ்டர் (மூடுபனி நீக்கம்) (FR/RR)

52 ஸ்மார்ட் வாட்ச் ஆண்ட்ராய்டு / டைசனுக்கான வாட்ச் ஃபேஸ்

53 ரிமோட் கண்ட்ரோல்கள்

54 வாகனத்தின் நிலை

55 முன்னெச்சரிக்கைகள்

56 OTA OTA நேவிகேஷன் நிகழ்நிலைத் தகவல்

57 3 ஆம் தரப்பு வழங்கும் சேவைகள் ஸ்போர்ட் செயலி

58 வானிலை செயலி

59 தனிப்பயனாக்கல் பயனர் சுயவிவரம் / பேக்அப்

60 காலண்டருடன் ஒருங்கிணைப்பு

61 மேம்பட்ட நேவிகேஷன் சர்வர் அடிப்படையில் வழித்தடத்திற்கான வழிகாட்டல்

வெளிப்புற அளவீடுகள்

நீளம் x அகலம் x உயரம் 4 630 mm X 1 865 mm X 1 665 mm

வீல்பேஸ் 2 755 mm

Tags:    

மேலும் செய்திகள்